
சென்னை,
நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள இல்லத்தில், இறுதிச் சடங்குகளுக்காக அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது. இவரது மறைவுக்கு ரசிகர்களும், திரைப்பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
நடிகர்கள் சத்தியராஜ், இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர். இந்த நிலையில் நடிகர் செந்தில், கவுண்டமணியின் மனைவி உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.