நடிகர் அல்லு அர்ஜூன் நீதிமன்றத்தில் ஆஜர்

4 months ago 13

திருமலை: புஷ்பா-2 திரைப்படத்தின் பிரிமியம் காட்சி கடந்த 4ம் தேதி ஐதராபாத்தில் வெளியானபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி ரேவதி என்ற பெண் இறந்த நிலையில் இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர் அல்லு அர்ஜூனுக்கு நேற்று முன்தினம் நாம்பள்ளி நீதிமன்றம் நிபந்தனைகளுடன் கூடிய ஜாமீன் வழங்கியது. இந்த வழக்கில் ஜாமீன் பத்திரங்களை தாக்கல் செய்வதற்காக அல்லு அர்ஜூன் நேற்று நாம்பள்ளி நீதிமன்றத்துக்கு வந்தார். இந்நிலையில் 2019ம் ஆண்டு புஷ்பா திரைப்பட படப்பிடிப்பு துவங்கியது முதல் நீண்ட தலைமுடி, சவரம் செய்யப்படாத தாடி ஆகியவற்றுடன் 5 ஆண்டு காலம் காணப்பட்ட அல்லு அர்ஜூன் நேற்று தலைமுடியை வெட்டிக்கொண்டு, தாடியை ட்ரிம் செய்து சாதாரண கெட்டப்பில் நீதிமன்றத்துக்கு வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

The post நடிகர் அல்லு அர்ஜூன் நீதிமன்றத்தில் ஆஜர் appeared first on Dinakaran.

Read Entire Article