புதுச்சேரி: புதுச்சேரி அரசு செய்தி மற்றும் விளம்பரத்துறை, நவதர்ஷன் திரைப்படக் கழகம் மற்றும் அலையன்ஸ் பிரான்சேஸ் ஆகியவை இணைந்து இந்தியத் திரைப்பட விழா தொடக்கம் மற்றும் 2023-ம் ஆண்டின் சிறந்த திரைப்படத்துக்கான விருது வழங்கும் விழாவை இன்று நடத்தினர்.
அலையன்ஸ் பிரான்சேஸ் கலை அரங்கில் நடைபெற்ற தொடக்க விழாவில் வேளாண் அமைச்சர் தேனீ. ஜெயக்குமார், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் சாய் ஜெ.‌சரவணன் குமார் ஆகியோர் கலந்து கொண்டு விழாவினைத் தொடங்கி வைத்து