நடிகரைப் பார்க்க அதிகளவு கூட்டம் வரும்.. ஆனால்...! - சீமான் கருத்து

2 months ago 14

தேனி,

தேனியில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

விஜய்யின் வருகையால் எனது வாக்குகள் குறையாது. விஜய் ரசிகர்கள் சிலரும் எனக்குத்தான் வாக்களிப்பார்கள். எம்.ஜி.ஆர்., ரஜினி, கமல், விஜய் உள்ளிட்டோர் அரசியல் கட்சி தொடங்கும்போது ரசிகர்களை சந்தித்துதான் வந்தனர். ஆனால், திரைத்துறையில் இருந்து வந்தநான்,மக்களை சந்தித்துதான் அரசியலுக்கு வந்தேன்.

ஒரு நடிகரைப் பார்க்க கூட்டம் அதிகளவு வரும். ஆனால், கூட்டத்திற்கு வந்தவர்கள் எல்லோரும் வாக்களிப்பார்களா என்பது சந்தேகம்தான். கூட்டணியில் இடம்பெறுபவர்களுக்கு அதிகாரத்தில் பங்கு என்பது விஜய்யின் பெருந்தன்மை; அதனை ஏற்று அவருடன் கூட்டணியில் இணைவது அவரவர் விருப்பம். எங்களைப் பொறுத்தவரை யாருடனும் கூட்டணி கிடையாது; தனித்துதான் போட்டியிடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.

Read Entire Article