புதுடெல்லி: நடப்பு கல்வி ஆண்டுக்கான இளநிலை மருத்துவக் கல்வி நுழைவு தேர்வான நீட்(யுஜி) தேர்வு குறித்த அறிவிப்பு கடந்த 2024 டிசம்பர் மாதம் வெளியாக இருக்க வேண்டிய நிலையில், காலதாமதம் ஆகி வந்தது. இந்த நிலையில் தேசிய தேர்வு முகமை நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்ட செய்தி குறிப்பில், ‘‘2025ம் கல்வி ஆண்டுக்கான இளநிலை நீட் தேர்வு ஓ.எம்.ஆர் அடிப்படை எனப்படும் பேனா மற்றும் பேப்பர் முறையில் நடைபெறும்.
குறிப்பாக ஒரே நாளில், ஒரே கட்டமாக(ஷிப்ட்) நீட் இளநிலை தேர்வு நடத்தப்படும். சந்தேகங்களுக்கு 011- 40759000 என்ற தொலைபேசி எண் அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் மூலம் மாணவர்கள் தேசிய தேர்வு முகமையை தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டு ஆன்லைனில் நீட் தேர்வு நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பழைய முறைப்படி நடக்கும் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது.
The post நடப்பாண்டு நீட் தேர்வு ஆன்லைனில் நடக்காது appeared first on Dinakaran.