சென்னை, ஏப். 18: சென்னையில் நடப்பு ஆண்டில் இதுவரை 253 வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 3,628.71 கிலோ உலர் கஞ்சா, 74.150 கிலோ ஹசிஷ், 58 கிலோ சாராஸ், 1 கிலோ ஹெராயின், 1.4 கிலோ கஞ்சா சாக்லெட் போன்றவை போதைப்பொருள் நுண்ணறிவுப் பிரிவு போலீசாரால் நேற்று எரிக்கப்பட்டது. இதுகுறித்து காவல்துறை வெளியிட்ட அறிக்கை: போதையில்லா தமிழ்நாடு முயற்சியின் ஒரு பகுதியாக, பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருட்கள் மற்றும் மனமயக்கப் பொருட்களை அழிக்கும் பணி, தமிழ்நாடு போதைப்பொருள் நுண்ணறிவுப் பிரிவு மூலம் குறிப்பிட்ட கால இடைவெளியில் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று 187 வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 2215.71.கி. உலர் கஞ்சா, 58 கிலோ சாராஸ், 1 கிலோ ஹெராயின், 1.4 கிலோ கஞ்சா சாக்லெட் போன்ற போதைப்பொருட்கள் அனைத்து சட்ட முறைகளையும் பின்பற்றி செங்கல்பட்டு மாவட்டம் தென்மேல்பாக்கத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட எரிக்கும் ஆலையில் எரிக்கப்பட்டது.
நடப்பு ஆண்டில் இதுவரை 253 வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 3628.71 கிலோ உலர் கஞ்சா, 74.150 கிலோ ஹசிஷ், 58 கிலோ சாராஸ், 1 கிலோ ஹெராயின், 1.4 கிலோ கஞ்சா சாக்லெட்கள் போதைப்பொருள் நுண்ணறிவுப் பிரிவினரால் எரிக்கப்பட்டது. அப்போது, காவல்துறை தலைவர், குற்றம், காவல் கண்காணிப்பாளர், போதைப்பொருள் நுண்ணறிவுப் பிரிவு, சென்னை, மற்றும் உதவி இயக்குநர், தமிழ்நாடு தடய அறிவியல் பிரிவு, சென்னை ஆகியோர் போதை மருந்துகள் மற்றும் மனமயக்கப் பொருட்களை அழிக்கும் செயல்முறையை கண்காணித்தனர். போதைப்பொருட்கள் மற்றும் போதைப்பொருட்களின் சட்ட விரோத விற்பனை மற்றும் கடத்தல் தொடர்பான தகவல்களை கட்டணமில்லா தொலைபேசி உதவி எண் 10581 மூலம் மற்றும் வாட்ஸ்அப் எண் 9498410581 அல்லது மின்னஞ்சல் முகவரி மூலம் பொதுமக்கள் தெரிவிக்கலாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
The post நடப்பாண்டில் 253 வழக்குகளில் பறிமுதல் செய்த உலர் கஞ்சா உள்பட 3628.71 கிலோ போதைப்பொருள் தீயிட்டு அழிப்பு appeared first on Dinakaran.