நடந்தாய் வாழி காவிரி திட்டத்தின் முதல் கட்ட திட்ட நிதியை பெற நடவடிக்கை: அமைச்சர் துரைமுருகன்

1 month ago 11

தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது பேசிய, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஈஸ்வரன், மத்திய, மாநில அரசு நிதியுதவியோடு நடைபெறும் நடந்தாய் வாழி காவிரி திட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ஒத்துழைப்பு வழங்கவில்லை என நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார். நடந்தாய் வாழி காவிரி திட்டத்தின் நிலை என்ன என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் துரைமுருகன் கூறியதாவது: இந்த திட்டம் இரண்டு கட்டங்களாக நடைபெறுகின்றன. காவிரி ஆற்றில் மேட்டூர் முதல் திருச்சி வரை மற்றும் 5 கிளை ஆறுகளை தூர்வாருவது, மேம்படுத்துவது முதற்கட்டம். இரண்டாவதாக திருச்சியில் இருந்து காவிரி கடல் முகத்துவாரங்களில் கலக்கும் பகுதி வரை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

முதல் கட்ட திட்டம் ரூ.934.30 கோடியில் செயல்படுத்தப்பட உள்ளது. அதில் மத்திய அரசின் பங்கு 60 சதவீதம். நடந்தாய் வாழி காவிரி திட்டத்தின் முதல்கட்ட திட்ட நிதியை பெறவும், திட்ட அறிக்கை தயாரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார். 

Read Entire Article