நடத்தையில் சந்தேகம்; ஐ.டி. ஊழியரை சுத்தியலால் அடித்துக்கொன்ற கணவர்

13 hours ago 1

லக்னோ,

பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் நசருல்லா ஹைதர் (வயது 55). இவரது மனைவி அஸ்மா கான் (வயது 42). இந்த தம்பதிக்கு மகள், மகன் என 2 பிள்ளைகள் உள்ளனர்.

நசருல்லா குடும்பத்துடன் உத்தரபிரதேசத்தில் உள்ள நொய்டாவில் வசித்து வந்தார். அஸ்மா கான் நொய்டாவில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். நசருல்லா வேலை தேடி வந்தார்.

இதனிடையே, மனைவி அஸ்மா கான் நடத்தையில் நசருல்லாவுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இதனால், தம்பதிக்கு இடையே அடிக்கடை சண்டை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், அஸ்மா கானிடம் நசருல்லா நேற்று மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றிய நிலையில் நசருல்லா வீட்டில் இருந்த சுத்தியலால் அஸ்மா கானின் தலையில் அடித்துள்ளார். இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த அஸ்மா கான் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக குறித்து தகவலறிந்த போலீசார், விரைந்து வந்து அஸ்மா கானின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், மனைவியை சுத்தியலால் அடித்துக்கொலை செய்த நசருல்லாவை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Read Entire Article