நடத்தையில் சந்தேகம் அடித்து துன்புறுத்திய கணவனை எரித்து கொன்ற மனைவி

3 months ago 17

நாமக்கல்: நாமக்கல்லை அடுத்த காவேட்டிப்பட்டியைச் சேர்ந்தவர் முருகேசன்(32), போர்வெல் மோட்டார் மெக்கானிக். இவரது மனைவி ஜோதி (32). காதல் திருமணம் செய்த இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர். மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு, தினமும் குடித்து விட்டு வந்து அவரை முருகேசன் அடித்து உதைத்துள்ளார். நேற்று முன்தினம் இரவும் ஜோதியை சரமாரியாக தாக்கிய முருகேசன், போதையில் சோபாவில் படுத்து தூங்கியுள்ளார்.

நள்ளிரவு 12 மணியளவில் எழுந்த ஜோதி, முருகேசன் தூங்கிக் கொண்டிருந்த சோபாவிற்கு தீ வைத்துள்ளார். சோபா தீப்பிடித்து எரிந்ததில், அவர் உடல் கருகி உயிரிழந்தார். இதுகுறித்து நாமக்கல் போலீசார் விசாரித்தபோது சோபா தீப்பிடித்ததற்கு வேறு காரணங்களை கூறினார். சந்தேகம் அடைந்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியதில், கணவரை கொன்றதை ஒப்புக்கொண்டார்.இதையடுத்து, அவரை கைது செய்தனர்.

The post நடத்தையில் சந்தேகம் அடித்து துன்புறுத்திய கணவனை எரித்து கொன்ற மனைவி appeared first on Dinakaran.

Read Entire Article