மதுரை, ஜூலை 6: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் மதுரை கோட்டத்தில் மதுரை, திண்டுக்கல் மற்றும் விருதுநகர் மண்டலங்கள் உள்ளன. இவற்றில் உள்ள பேருந்துகளில் பணியாற்றும் 30 நடத்துநர்களுக்கு பயணச்சீட்டு ஆய்வாளர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான ஆணைகளை சம்பந்தப்பட்டவர்களிடம் அரசு போக்குவரத்துக்கழக மேலாண்மை இயக்குநர் சரவணன் வழங்கினார். இந்நிகழ்ச்சியில், மண்டல பொது மேலாளர்கள் மணி (மதுரை), முத்துகிருஷ்ணன்(திண்டுக்கல்), கலைவாணன்(விருதுநகர்) மற்றும் அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
The post நடத்துநர்களுக்கு பதவி உயர்வு appeared first on Dinakaran.