நக்சலைட்டுகள் தாக்குதல்; உயிரிழந்தவர்களின் தியாகம் வீண் போகாது: அமித் ஷா

4 months ago 13

புதுடெல்லி:

சத்தீஸ்கரின் பிஜப்பூர் மாவட்டத்தில் நக்சலைட்டுகள் வைத்த கண்ணிவெடியில் சிக்கி பாதுகாப்பு படையினர் 8 பேர் பலியானார்கள்.

நக்சலைட்டுகளின் இந்த தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள உள்துறை மந்திரி அமித் ஷா, இச்சம்பவத்தில் இறந்தவர்கள் குடும்பத்துக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-

"பிஜப்பூரில் பாதுகாப்பு வீரர்கள் இறந்த செய்தியால் நான் மிகவும் வருத்தமடைந்தேன். இறந்த வீரர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த துயரத்தை வார்த்தைகளால் வெளிப்படுத்த இயலாது. ஆனால் நமது வீரர்களின் தியாகம் வீண் போகாது என்று உறுதியளிக்கிறேன். மார்ச் 2026-க்குள் இந்தியாவில் நக்சலிசத்தை ஒழிப்போம்".

இவ்வாறு அமித்ஷா தனது 'எக்ஸ்' பதிவில் கூறியுள்ளார்.

இது கடந்த 2 ஆண்டுகளில் சத்தீஸ்காரில் பாதுகாப்புப் படையினர் மீது மாவோயிஸ்டுகள் நடத்திய மிகப்பெரிய தாக்குதல் இது என்பது குறிப்பிடத்தக்கது.

Read Entire Article