நகைக்கடனுக்கான ரிசர்வ் வங்கி சுற்றறிக்கை ரத்து கோரி வழக்கு: தலைமை பொதுமேலாளர் பதிலளிக்க உத்தரவு

1 week ago 7

மதுரை: மதுரையைச் சேர்ந்த பிச்சைராஜன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு: ரிசர்வ் வங்கியின் பொதுமேலாளர் கடந்த 30.9.2024ல் ஓர் சுற்றறிக்கை வெளியிட்டார். அதில் பல வழிகாட்டுதல்கள் பிறப்பிக்கப்பட்டிருந்தன. ஒரே பான் எண்ணை பயன்படுத்தி பல நகைக்கடன்களை பெறுவது, நகைக் கடன்களை குறிப்பிட்ட தொகை செலுத்தி திருப்பி வைப்பது, புதுப்பிப்பது ஆகியவை தொடர்பாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வழிகாட்டுதல்கள் மிகவும் தெளிவற்றவையாக வெளியிடப்பட்டுள்ளன. மக்களின் பொதுநலனுக்கு எதிராக முரண்பட்ட வழிகாட்டுதல்கள் உள்ளன.

தற்போதைய வழிகாட்டுதலின்படி நகையை திருப்பும்போது முழுத்தொகையையும் செலுத்த வேண்டிய நிலை உள்ளது. ஏழை மக்கள் அவ்வாறு செலுத்த இயலாமல் போனால், நகைகளை இழக்கும் நிலை ஏற்படும். தற்போது வெளியிடப்பட்ட சுற்றறிக்கையின் படி, ஒரு நபர் 5 முறை மட்டுமே நகைக்கடன்களை பெற இயலும். அதோடு நகர்ப்புறங்களில் ஒரு கிராமுக்கு ரூ.5 ஆயிரம், கிராமப்புறங்களில் ரூ.7,500 வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பாகுபாட்டினை ஏற்க இயலாது.

இது அரசியலமைப்பு விதிகளுக்கு எதிரானது. எனவே, தங்க நகைக்கடன் தொடர்பாக வெளியிடப்பட்ட சுற்றறிக்கையை சட்ட விரோதமானது, செல்லாது என அறிவித்து உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஜெ.நிஷா பானு, எஸ்.ஸ்ரீமதி ஆகியோர், மனுவிற்கு ரிசர்வ் வங்கியின் தலைமை பொதுமேலாளர் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை 8 வாரம் தள்ளி வைத்தனர்.

The post நகைக்கடனுக்கான ரிசர்வ் வங்கி சுற்றறிக்கை ரத்து கோரி வழக்கு: தலைமை பொதுமேலாளர் பதிலளிக்க உத்தரவு appeared first on Dinakaran.

Read Entire Article