நகை கடையில் கைவரிசை தப்பிய ஊழியர் சிக்கினார்

2 hours ago 1

துரைப்பாக்கம்: திருவல்லிக்கேணி பெரிய தெருவை சேர்ந்தவர் முனிருதின் (50). இவர், பாராதி சாலையில் தங்க நகைக்கடை நடத்தி வருகிறார். கடந்த 12ம் ேததி வாடிக்கையாளர் ஒருவர், தனது பழைய நகைகளான 5 கிராம் கொண்ட 3 தங்க நாணயங்கள் மற்றும் 1 ஜோடி கம்மலை கொடுத்து, புதிய நகைகளை வாங்கி சென்றார்.

பழைய நகைகளை கடையின் உரிமையாளர் முனிருதின் லாக்கரில் வைத்திருந்தார். இந்த நகை மாயமானது. மேலும் கடையில் பணியாற்றி வந்த திருவாரூர் மாவட்டம் பூதமங்கலம் பகுதியை சேர்ந்த முகமது பாசித் (25) என்பவரும் திடீரென வேலைக்கு வரவில்லை. இதனால் கடையில் உள்ள சிசிடிவி காட்சிகளை பார்த்த போது, லாக்கரில் உள்ள பழைய நகைகளை முகமது பாசித் திருடி ெசன்றது தெரியவந்தது.

உடனே கடையின் உரிமையாளர் முனிருதின் சம்பவம் குறித்து ஜாம்பஜார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், தலைமறைவாக இருந்த முகமது பாசித்தை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 5 கிராம் மதிப்புள்ள 3 தங்க நாணயங்கள், 1 ஜோடி கம்மல் பறிமுதல் செய்யப்பட்டது.

The post நகை கடையில் கைவரிசை தப்பிய ஊழியர் சிக்கினார் appeared first on Dinakaran.

Read Entire Article