நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் மீண்டும் 6 % சொத்து வரியை உயர்த்தியுள்ளதாக வெளியான செய்தி உண்மையில்லை : தமிழக அரசு விளக்கம்

12 hours ago 3

சென்னை : நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் மீண்டும் 6 சதவிகிதம் சொத்து வரியை உயர்த்தியுள்ளதாக வெளியான செய்தி முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், “ஒன்றிய அரசின் 15-வது நிதிக்குழுவின் நிபந்தனைகளின்படி. ஒவ்வொரு நகர்ப்புற அமைப்பும், மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி (GSDP) வளர்ச்சியின் சதவிகிதத்தை ஒப்பிடுகையில் சராசரியாக 11.5 சதவிகிதம் சொத்துவரி வருவாயை உயர்த்தினால் மட்டுமே, உள்ளாட்சி அமைப்புகளுக்கு 15-வது நிதிக்குழுவின் மானியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிபந்தனையைக் கருத்தில் கொண்டு 2024ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் சொத்துவரி அரசாணை எண்.113, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (எம்ஏ4) துறை, நாள் 5.9.2024-ன்படி 6 சதவிகிதம் உயர்த்தப்பட்டது. அதன் பிறகு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையினால் சொத்துவரி எதுவும் உயர்த்தப்படவில்லை. இந்நிலையில், 3.5.2025 நாளிட்ட ஒரு நாளிதழில் “எவ்வித அறிவிப்புமின்றி உள்ளாட்சி அமைப்புகள், 6 சதவிகிதம் சொத்து வரியை மீண்டும் உயர்த்தி அமலுக்கு வந்துள்ளதாக” வெளியிடப்பட்டுள்ள செய்தி உண்மைக்குப் புறம்பானதாகும்.”இவ்வாறு தெரிவித்தார்.

The post நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் மீண்டும் 6 % சொத்து வரியை உயர்த்தியுள்ளதாக வெளியான செய்தி உண்மையில்லை : தமிழக அரசு விளக்கம் appeared first on Dinakaran.

Read Entire Article