
புதுடெல்லி,
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான யுஸ்வேந்திர சாஹல், எதிர் வரும் ஐ.பி.எல். தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணியில் விளையாட உள்ளார். இவரை கடந்த மெகா ஏலத்தில் ரூ.18 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் வாங்கியது. கடந்த சீசன்களில் பெங்களூரு, ராஜஸ்தான் அணிகளில் விளையாடிய இவர் ஐ.பி.எல். தொடரில் அதிக விக்கெட் வீழ்த்தியவாராக (205 விக்கெட்டுகள்) உள்ளார்.
இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் அவரிடம் நீங்கள் எதிர்கொண்ட சவாலான பேட்ஸ்மேன் யார்? என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் 2 வீரர்களின் பெயர்களை கூறியுள்ளார்.
இது குறித்து பேசிய சாஹல், "ஒன்று தென் ஆப்பிரிக்காவின் ஹென்ரிச் கிளாசென். மற்றொன்று வெஸ்ட் இண்டீசின் நிக்கோலஸ் பூரன். அவர்களிடம் இருக்கும் அதிக சத்தி மற்றும் ஆற்றல் காரணமாக பேட்டின் விளிம்பில் பட்டால் கூட பந்து சிகசருக்கு பறக்கும். அவர்கள்தான் எனக்கு சவாலானவர்கள். அவர்கள் என் பந்தில் சிக்சரும் அடித்துள்ளனர். நானும் அவர்களுக்கு எதிராக சிறப்பாகவே செயல்பட்டுள்ளேன்" என்று கூறினார்.