தொழில்முனைவோர்கள் சிறிய ஜவுளிப்பூங்கா அமைக்க அறிவுறுத்தல்

2 hours ago 1

சிவகங்கை, பிப். 8: மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவித்துள்ளதாவது: இந்திய பொருளாதாரத்தில் ஜவுளித்தொழில் ஒரு முக்கியமான இடத்தினை பிடித்துள்ளது. விவசாயத்திற்கு அடுத்த படியாக கிராமப்புற மக்களுக்கு பெரிய அளவிலான வேலைவாய்ப்பினை வழங்குவதில் ஜவுளித்துறைக்கு மிகப்பெரிய பங்கு உள்ளது. நாட்டின் மொத்த ஜவுளி உற்பத்தியில் தமிழ்நாட்டின் பங்கு மிக முக்கியமானதாகும். அதில், துணிநூல் துறையின் கட்டமைப்பை வலுப்படுத்த அரசு செயல்படுத்தி வரும் பல திட்டங்களுள் சிறிய அளவிலான ஜவுளிப்பூங்கா அமைக்கும் திட்டமும் ஒன்றாகும்.

இத்திட்டத்தின் கீழ் குறைந்தபட்சம் 2 ஏக்கர் நிலப்பரப்பில் குறைந்தபட்சம் 3ஜவுளி உற்பத்தி தொழிற்கூடங்கள் அமைக்கப்பட வேண்டும். தகுதி வாய்ந்த திட்ட மதிப்பில் (பொது உள்கட்டமைப்பு வசதிகள், பொதுப்பயன்பாட்டுக்கான கட்டிடங்கள், உற்பத்தி கூட கட்டிடங்கள்) 50 சதவீதம் அல்லது ரூ.2.50 கோடி இவற்றில் எது குறைவானதோ அது தமிழ்நாடு அரசின் மானியமாக வழங்கப்படுகிறது. சிறிய அளவிலான ஜவுளிப்பூங்காக்கள் அமைப்பதன் மூலம் நடுத்தர நிறுவனங்களின் மூலம் வளர்ச்சி ஏற்பட்டு மாவட்டத்தில் வேலைவாய்ப்பு பெருகும், அதிகளவில் அன்னியச் செலவாணி ஈட்டுவதற்கு வாய்ப்புகள் ஏற்படும்.

எனவே, சிறிய அளவிலான ஜவுளிப்பூங்கா அமைக்கும் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசு வழங்கும் சலுகைகளை சிவகங்கை மாவட்டத்தில் பயன்படுத்தி, தொழில் வளர்ச்சியை மேம்படுத்தவும், வேலைவாய்ப்புகளைப் பெருக்கவும் அனைத்து தொழில்முனைவோரும் முன் வரவேண்டும். கூடுதல் தகவல் பெற மண்டல துணை இயக்குநரை, மண்டல துணி நூல் துணை இயக்குநர் அலுவலகம், 39, விஸ்வநாதபுரம் மெயின் ரோடு, மதுரை 625 014 என்ற முகவரியிலோ, அல்லது mailto:[email protected] என்ற மின்னஞ்சல் முகவரியின் வாயிலாகவோ அல்லது 0452 2530020 என்ற தொலைபேசி எண் வாயிலாகவோ தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post தொழில்முனைவோர்கள் சிறிய ஜவுளிப்பூங்கா அமைக்க அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Read Entire Article