சென்னை: தொழில்முனைவோர் மேம்பாட்டு திட்டம் மூலம் 4 நாட்கள் சினிமாட்டிக் டிரோன் பயிற்சி வரும் 27ம் தேதி முதல் 30ம் தேதி தேதி வரை வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இப்பயிற்சியில் சினிமாட்டிக் டிரோன் நுட்பங்கள், வான்வழி கதையம்சம், முக்கியமான சினிமாட்டிக் டிரோன் ஷாட்கள் மற்றும் டிரோன் ரிமோட் கட்டுப்பாடுகள், சினிமா ஸ்டண்ட் காட்சிகளுக்கான டிரோன் ஷாட்கள், சினிமா பாடல் காட்சிகளுக்கான டிரோன் ஷாட்கள், சினிமா டி.ஐ, நிற ஒழுங்குபடுத்தல் மற்றும் எடிட்டிங் நுட்பங்கள், டிஜிசிஏ சட்ட மற்றும் ஒழுங்கமைப்பு குறித்த பரிசீலனைகள் மற்றும் விதிமுறைகள் போன்றவை கற்றுத்தரப்படும். அரசு வழங்கும் உதவிகள்.
இப்பயிற்சிக்கு ஆர்வமுள்ள, 18 வயதுக்கு மேற்பட்ட தொழில்முனைவோர் (ஆண், பெண்) விண்ணப்பிக்கலாம். குறைந்தபட்ச கல்வித் தகுதி 10ம் வகுப்பு. இப்பயிற்சியில் பங்குபெறும் பயனாளிகளுக்கு குறைந்த வாடகையில் தங்கும் விடுதி உள்ளது. கூடுதல் விவரங்களை பெற விரும்புவோர் www.editn.in என்ற வலைத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
The post தொழில்முனைவோர் மேம்பாட்டு திட்டம் மூலம் சினிமாட்டிக் டிரோன் பயிற்சி: அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.