சென்னை,
சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் தமிழ்நாடு மாநில காவல்துறையின் ஓய்வுபெற்ற ஏ.ஐ.ஜி. ரவி சேகரன் எழுதிய 'சைபர் கிரைம் சவால்களும் எச்சரிக்கைகளும்' என்ற நூல் வெளியிட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கலந்து கொண்டார். பின்னர் நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது;-
"சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து நம்மை சுற்றியுள்ள அனைவருக்கும் புரிதலையும், விழிப்புணர்வையும் ஏற்படுத்த வேண்டும். நாட்டின் எல்லையை தாண்டி தாக்குவதும், பாதிப்புகளை ஏற்படுத்துவதும் மட்டுமே பயங்கரவாதம் என்று இல்லை. தொழில்நுட்பம் மூலம் தனிநபரை அச்சுறுத்துவதும் பயங்கரவாதம்தான். சைபர் குற்றங்களை கட்டுப்படுத்தும் விவகாரத்தில் காவல்துறையினர் தங்கள் திறமையை அதிகமாக வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று முதல்-அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்."
இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.