தொழில்நுட்ப கோளாறு.. மெட்ரோ ரெயில் சேவையில் தாமதம்

6 months ago 20

சென்னை,

தொழில்நுட்ப கோளாறு காரணமாக சென்னையில் மெட்ரோ ரெயில் சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அதன்படி, சென்னை விமான நிலையம் மற்றும் விம்கோ நகர் பணிமனை இடையிலான நீல வழித்தடத்தில் மெட்ரோ ரெயில் சேவை வழக்கத்திற்கு மாறாக 18 நிமிட இடைவெளியில் இயக்கப்பட்டு வருகிறது.

இதேபோல் சென்னை விமான நிலையம் மற்றும் சென்னை சென்ட்ரல் இடையிலான ரெயில் சேவை 7 நிமிட இடைவெளியிலும், சென்னை விமான நிலையத்தில் இருந்து வண்ணாரப்பேட்டை இடையே 6 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.

டோல்கேட் - விம்கோ நகர் டிப்போ வரை 6 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படுகின்றன. பச்சை வழித்தடத்தில் வழக்கமான இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படுவதாக மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. தொழில்நுட்ப கோளாறை சரிசெய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Read Entire Article