தொழில்நுட்ப கோளாறு: அவசரமாக கேரளாவில் தரையிறக்கப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம்

6 months ago 19

திருவனந்தபுரம்,

துபாயில் இருந்து புறப்பட்ட ஐ.எக்ஸ். ரக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் ஹைட்ராலிக் அமைப்பில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால் சுதாரித்து கொண்ட விமானி கேரளாவின் கரிபூர் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்க அனுமதி கோரினார். அனுமதி வழங்கப்பட்டதையடுத்து, விமான நிலையம் முழுவதும் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது.

இதையடுத்து, காலை 8.30 மணியளவில் பத்திரமாக தரையிறக்கப்பட்டதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த விமானத்தில் 6 பணியாளர்கள் உள்பட 182 பேர் பயணம் செய்ததாக வட்டாரங்கள் தெரிவித்தன. விமான தரையிறக்கப்பட்டதையடுத்து அவசர நிலை வாபஸ் பெறப்பட்டது என்று விமான நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Read Entire Article