தொழில் முனைவோர் பயிற்சி

3 hours ago 1

 

மதுரை, மார்ச் 15: பெண்களுக்கான தொழில் சான்றிதழ்கள் மற்றும் தொழில் கடன் இணைப்பு பயிற்சி இந்திய தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனத்தின் மூலம் பெண்களை தொழில் முனைவோர்களாக மாற்றும் வகையில் வழங்கப்படுகிறது. மதுரையில் ஏற்கனவே மாட்டு சாணத்தில் மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்கள் தயாரித்தல் பயிற்சி மற்றும் கைகளால் சோப்புகள் தயாரித்தல் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக மூன்று நாள் தொழில் சான்றிதழ் மற்றும் கடன் இணைப்புகள் என்ற பயிற்சி வழங்கப்பட்டது.

இந்த பயிற்சி மூலமாக பெண்கள் தங்களது தொழிலை பதிவு செய்ய தேவையான உதயம் சான்றிதழ், குடிசை தொழில் சான்றிதழ், கைவினை கலைஞர்கள் அட்டை, இணையதள வணிகம் மற்றும் தொழிற்கடன் அரசு மானிய கடன் திட்டங்கள் தொடர்பான பயிற்சிகள் வழங்கப்பட்டது. இந்த பயிற்சியில் 40க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை தொழில்முனைவோர் உதவி அலுவலர் தவசிமுத்து செய்திருந்தார்.

 

The post தொழில் முனைவோர் பயிற்சி appeared first on Dinakaran.

Read Entire Article