பழநி, ஜன. 6: பழநியில் தொழில் உரிமம் பெறாத நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்படுமென நகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. பழநி நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள திருமண மண்டபங்கள், பள்ளிகள், உணவகங்கள், தேநீர்க்கடைகள், பேக்கரிகள், சிறு-குறு தொழில் நடத்துபவர்கள், பஞ்சாமிர்த விற்பனை நிலையங்கள், அரசு கட்டிடங்கள் மற்றும் அலுவலகங்கள், தங்கும் விடுதிகள்,
மடங்கள், மருத்துவமனைகள், தியேட்டர்கள் மற்றும் இதர தொழில்கள் செய்யும் அனைத்து உரிமையாளர்களும் பழநி நகராட்சி அலுவலகத்தில் உரிய விண்ணப்பம் அளித்து சுகாதாரச் சான்று மற்றும் அபாயகரமான மற்றும் இருவருக்கத்தக்கதுமான தொழில் உரிமம் பெற்றுக் கொள்ள வேண்டும். தவறும் பட்சத்தில் தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டம் 1920 மற்றும் தமிழ்நாடு பொது சுகாதாரச் சட்டம் 1939ன்படி பிரிவு 101,102,103,104,105,106,107 மற்றும் 134ன் படி பூட்டி சீல் வைக்கப்படுமென நகராட்சி அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
The post தொழில் உரிமம் பெறாத நிறுவனங்களுக்கு சீல் appeared first on Dinakaran.