தொழிலதிபர்கள் வீடுகளில் நடந்த ஐடி ரெய்டு நிறைவு

4 weeks ago 7

பழநி: பழநி அருகே சத்திரப்பட்டி பண்ணையக்காரர் தோட்டத்தை சேர்ந்தவர் செந்தில்குமார் (47). நிதி நிறுவன அதிபரான இவர், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்திருப்பதாக எழுந்த புகாரை தொடர்ந்து கடந்த 18ம் தேதி இவரது வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் 20க்கும் மேற்பட்டோர் சோதனை நடத்தினர். நேற்று அதிகாலை 2.30 மணிக்கு சோதனை நிறைவடைந்தது. 10க்கும் மேற்பட்ட கட்டை பைகளில் லேப்டாப், ஹார்ட் டிஸ்க், முக்கிய ஆவணங்கள், கணக்கில் வராத பணம், நகைகளை வருமான வரி துறையினர் அள்ளி சென்றதாக கூறப்படுகிறது. இதேபோல் ஒட்டன்சத்திரம், தாராபுரம் சாலையை சேர்ந்த சகோதரர்கள் குழந்தைவேல், முருகன் ஆகியோரது வீடு, நகைக்கடையிலும் நேற்று சோதனை முடிந்தது.

The post தொழிலதிபர்கள் வீடுகளில் நடந்த ஐடி ரெய்டு நிறைவு appeared first on Dinakaran.

Read Entire Article