தொழிலதிபரை கரம் பிடித்த நடிகை பார்வதி நாயர்

3 months ago 13

சென்னை,

கடந்த 2012-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான பாப்பின்ஸ் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் பார்வதி நாயர். அதனைத்தொடர்ந்து, தமிழில் உத்தம வில்லன், மாலை நேரத்து மயக்கம், எங்கிட்ட மோதாதே, நிமிர், சீதக்காதி, என்னை அறிந்தால், கோடிட்ட இடங்களை நிரப்புக உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள நடிகை பார்வதி நாயர், விஜய்யின் 'தி கோட்' படத்திலும் நடித்திருந்தார். தற்போது இவர் நடித்த 'ஆலம்பனா' என்கிற திரைப்படம் கூடிய விரைவில் வெளியாக உள்ளது.


சமீபத்தில் பார்வதி நாயர் - ஆஷ்ரித் அசோக் இருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இன்று இருவருக்கும் திருவான்மியூரில் திருமணம் நடைபெற்றது. புதுமணத் தம்பதிக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இவர்களின் திருமண போட்டோ இணையத்தில் வெளியானதைத் தொடர்ந்து ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Read Entire Article