தொழிற்பயிற்சி நிலையத்தில் 9ம் தேதி தேசிய தொழிற்பழகுநர் பயிற்சி சேர்க்கை முகாம்

2 months ago 8

திருவாரூர், டிச. 5: திருவாரூர் மாவட்டத்தில் தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி முடித்த பயிற்சியாளர்களுக்கு தேசிய தொழிற்பழகுநர் பயிற்சிக்கான சேர்க்கை முகாம் வரும் 9ம் தேதி நடைபெறுவதாக கலெக்டர் சாரு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் மூலம் தேசிய தொழிற் பழகுநர் சேர்க்கை முகாம் திருவாரூர் கலெக்டர் அலுவலக இணைப்பு கட்டிடத்தில் இயங்கி வரும் மாவட்ட திறன் பயிற்சி அலுவலக வளாகத்தில் வரும் 9ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 4 வரையில் நடைபெறவுள்ளது.

இதில், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் மற்றும் மாவட்டத்தில் உள்ள முன்னணி நிறுவனங்கள் கலந்துகொண்டு தேசிய தொழிற்பழகுநர் பயிற்சிக்கு பயிற்சியாளர்களை தேர்வு செய்ய உள்ளார்கள். மேலும் விவரங்களுக்கு திருவாரூர் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தை 04366-227411 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். எனவே இம்முகாமில் திருவாரூர் மாவட்டதை சேர்ந்த தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி முடித்த பயிற்சியாளர்கள் அனைத்து அசல் சான்றிதழ்களுடன் கலந்து கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

The post தொழிற்பயிற்சி நிலையத்தில் 9ம் தேதி தேசிய தொழிற்பழகுநர் பயிற்சி சேர்க்கை முகாம் appeared first on Dinakaran.

Read Entire Article