
தானே,
மராட்டிய மாநிலம் பிவாண்டியில் ஒரு மரத்தொழிற்சாலை செயல்பட்டு வந்தது. இந்த நிலையில் தொழிற்சாலையின் 4 வது மாடியில் நேற்று தீ ஏற்பட்டது. அதிகாலை 3.30 மணியளவில் விபத்து குறித்து தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவலறிந்த தீயணைப்புத்துறையினர் நான்கு தீயணைப்பு வாகனங்களில் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இருப்பினும் தீ மளமளவென பரவத்தொடங்கியதில் தொழிற்சாலை கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது. இந்த தீயை கட்டுப்படுத்த தீயணைப்புத்துறையினர் போராடி வருகின்றனர்.
இருப்பினும் தீயானது 24 மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்து நீடித்தது. மேலும் தீயால் இடிபாடுகள் ஏற்பட்ட காரணத்தால் தீயை அணைக்கும் பணியில் பெரும் தொய்வு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் தீயை கட்டுக்குள் கொண்டுவர தீயணைப்புத்துறையினர் எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்தால் இதுவரை எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை.