
புதுடெல்லி,
ஈரான் அதிபர் மசூத் பெசஸ்கியான், நேற்று முன்தினம் இந்திய பிரதமர் மோடியை தொலைபேசியில் அழைத்து உரையாடினார். அப்போது, பஹல்காம் தாக்குதல் போன்ற துயர சம்பவங்கள் பிராந்தியத்தில் உள்ள அனைத்து நாடுகளின் பொறுப்பை அதிகரிக்கின்றன. பயங்கரவாதத்தின் வேர்களை அழிக்க ஒன்றிணைவது அவசியம் என்று பெசஸ்கியான் தெரிவித்தார்.
மேலும் அவர் பேசும்போது, இந்தியா-ஈரான் இடையேயான நல்லுறவு, பொருளாதாரம், வர்த்தக கட்டமைப்புகள் மேலும் விரிவடையும் என நம்புகிறேன். இருநாட்டு உறவை வலுப்படுத்த பிரதமர் மோடி ஈரானுக்கு வருகை தர வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். பின்னர், ஈரானின் ஆதரவுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார். மேலும் ஈரானின் ராஜேய் துறைமுகத்தில் நடந்த கன்டெய்னர் குண்டுவெடிப்பு குறித்து மோடி ஆழ்ந்த வருத்தத்தை வெளிப்படுத்தினார்.