தொழிற்சாலை விபத்துகளை தடுக்க முதுநிலை டிப்ளமோ படிப்பு; சென்னை ஐஐடி புதிய முயற்சி

3 hours ago 1

சென்னை: உற்பத்தி, சுரங்கம், எரிசக்தி தொழிற்சாலைகளில் ஏற்படும் விபத்துக்களை குறைப்பதற்கான புதிய படிப்பை சென்னை ஐஐடி தொடங்கியுள்ளது. உற்பத்தி, சுரங்கம், எரிசக்தி மற்றும் தொடர்புடைய துறைகளில் ஏற்படும் விபத்துக்களைக் குறைப்பதற்கான புதிய படிப்பை சென்னை ஐஐடி தொடங்கியுள்ளது. செயல்முறைப் பாதுகாப்பு சவால்களை நிர்வகிப்பதில், ஊழியர்களின் திறன்களை மேம்படுத்தும் வகையில் பாதுகாப்பு செயல்பாடுகளுக்கான முதுநிலை டிப்ளமோ படிப்பு முதன்முறையாக தொடங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சென்னை ஐஐடி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
வேதியியல், சிவில் இன்ஜினியரிங், மெக்கானிக்கல், இன்ஸ்ட்ரூமென்டேஷன் இன்ஜினியரிங், பெட்ரோலியம் மற்றும் தொடர்புடைய பிரிவுகளில், பிஇ, பிடெக் பட்டம் பெற்றவர்கள் அல்லது வேதியியலில் முதுநிலை பட்டத்துடன் 2 ஆண்டு அனுபவம் உடையவர்களும் இப்படிப்பில் சேரலாம். சென்னை ஐஐடியில் இல்லாமல், அனைத்து கல்வி மற்றும் புறவெளி நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கும், சென்டர் பார் அவுட்ரீச் அண்ட் டிஜிட்டல் எஜுகேஷன் மூலம் இப்பாடத்திட்டம் ஆன்லைன் முறையில் செயல்படுத்தப்படும். இதில், சேர்வதற்கு மே 31ம் தேதி வரையில் விண்ணப்பிக்கலாம். ஜூலை 13, 2025 அன்று நுழைவுத் தேர்வு நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் https://code.iitm.ac.in/processsafety என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம். செப்டம்பர் முதல் டிசம்பர் வரை, ஜனவரி முதல் ஏப்ரல் வரை, மே முதல் ஆகஸ்ட் வரை என மூன்று செமஸ்டர்கள் உள்ளன. மாணவர்கள் ஒரு பருவத்திற்கு அதிகபட்சமாக மூன்று பாடநெறிகளை எடுத்துப் படிக்க அனுமதிக்கப்படும். முழுப்பாடத்திட்டத்தையும் ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளில் முடிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை ஐஐடி முதுநிலை டிப்ளமோ (செயல்முறை பாதுகாப்பு) பாடத்திட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜகோபாலன் னிவாசன் கூறும்போது, “இந்தியாவில் உற்பத்தி, சுரங்கம், எரிசக்தி போன்ற துறைகளில் 240 பணியிட விபத்துக்கள் நிகழ்ந்ததாக, ஆய்வறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் விளைவாக 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும், 850க்கும் அதிகமானோர் கடுமையான காயங்களுக்கு ஆளானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ரசாயனம், மருந்துத் துறைகள் மிகக் கடுமையான விபத்துக்களை சந்தித்திருக்கின்றன.

இவை தொழில்துறை பாதுகாப்பு நடைமுறைகள், நெறிமுறைகள் பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லாததால் ஏற்படுகின்றன. எனவே, தொழில்துறையில் பணிபுரியும் வல்லுநர்களுக்காக பிரத்யேகமாக இப்பாடத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதுகாப்பு நடைமுறைகள் குறித்த தங்கள் அறிவை மேம்படுத்திக் கொள்ளவும், விரிவுபடுத்திக் கொள்ளவும் இயலும்” என்றார்.

The post தொழிற்சாலை விபத்துகளை தடுக்க முதுநிலை டிப்ளமோ படிப்பு; சென்னை ஐஐடி புதிய முயற்சி appeared first on Dinakaran.

Read Entire Article