தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

2 months ago 10

பள்ளிபாளையம், நவ.27: ஒன்றிய அரசு தொழிலாளர் நலத்திட்டங்களை புறக்கணித்து, பெரும் நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்படுவதை கண்டித்து, பள்ளிபாளையத்தில் தேசிய தொழிற்சங்க கூட்டமைப்பினர் நேற்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒருங்கிணைப்பாளர் பெருமாள் தலைமை வகித்து பேசினார். விவசாய சங்க மாவட்ட செயலாளர் செல்வராஜ் முன்னிலை வகித்தார். தொழிற்சங்கம், விவசாய தொழிலாளர்களின் கோரிக்கைகளை ஆதரித்து ஏஐடியூசி மாவட்ட செயலாளர் தனசேகர், மாவட்ட தலைவர் ஜெயராமன், ஏஐகேஎஸ் மாவட்ட செயலாளர் செல்வராஜ், ஏஐசிசிடியூ கார்த்திகேயன், வெங்கடேசன், தொழிற்சங்க நிர்வாகிகள் புகழேந்தி, அசோகன், ஆதிநாராயணன், ரமேஷ், ராஜாராம் பங்கேற்று கண்டன கோஷமிட்டனர்.

The post தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Read Entire Article