தொண்டர்களுக்கு தவெக பெயர் பொறித்த பைகளில் ஸ்னாக்ஸ்- விஜய் கட்சி நிர்வாகிகள் ஏற்பாடு

2 months ago 13

சென்னை,

தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சி தொடங்கியுள்ள நடிகர் விஜய், வரும் 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தம் கட்சி போட்டியிடும் என்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். அதற்கு முன்னோட்டமாக, கட்சியின் மாநாடு நாளை விக்கிரவாண்டியில் நடத்தப்படுகிறது. முதல் மாநாடு என்பதாலும், தமிழக மக்கள் மத்தியில் நல்ல எண்ணத்தை உருவாக்க வேண்டும் என்பதாலும், மாநாட்டின் ஏற்பாடுகள் பிரமாண்டமாக நடந்து வருகின்றன.

விக்கிரவாண்டி வி. சாலையில் மேடை, பந்தல் அமைக்கும் பணி முடியும் தருவாயில் உள்ளது. கட்சியின் நோக்கங்கள், கொள்கை திட்டங்கள் குறித்து, தொண்டர்கள் மத்தியில் நாளை விஜய் உரையாற்ற இருக்கிறார். கட்சி தொடங்கிய பின் அவரது முதல் உரை என்பதால், தமிழக அரசியல் கட்சியினர் அனைவரும் பெரும் ஆர்வத்துடன் எதிர்பார்க்கின்றனர். மாநாட்டில் பங்கேற்க வரும் தொண்டர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. கட்சியினருக்கு வாட்டர் பாட்டில், பிஸ்கட் உள்ளிட்ட ஸ்னாக்ஸ் அடங்கிய பைகளும் கொடுக்கப்பட உள்ளன. இந்த பைகளில் தமிழக வெற்றிக் கழகம் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது.

Read Entire Article