தொடர்ந்து நாடாளுமன்றத்தில் போராடுவோம்: கனிமொழி எம்.பி.

14 hours ago 1

புதுடெல்லி,

'தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும்' என்ற வாசகம் அடங்கிய டி-சர்ட் அணிந்து அவைக்கு சென்றது குறித்து திமுக நாடாளுமன்றக்குழுத் தலைவர் கனிமொழி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

ஆளுங்கட்சியினர் தங்கள் கருத்துகள், நம்பிக்கைகள் அடங்கிய வாசகங்களை கொண்ட சால்வை, மாஸ்க்கை அவைக்கு அணிந்து வரும்போது, அதை யாரும் எதுவும் சொல்வதில்லை; தமிழ்நாட்டு உறுப்பினர்கள் அவ்வாறு வாசகம் அடங்கிய உடையை அணிந்து வந்தால் மட்டும், அதை மாற்ற வேண்டுமென சபாநாயகர் அறிவுறுத்துகிறார்.

இதற்கு முன் எத்தனையோ உறுப்பினர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு வாசகம் பொறித்த முகக் கவசங்களை அணிந்து வந்திருக்கிறார்கள். சபாநாயகரின் உத்தரவு ஜனநாயகத்துக்கு விரோதமான செயலாகவே உள்ளது.

தொகுதி மறு சீரமைப்பு தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த கோரிக்கை வைத்து வருகிறோம்; ஆனால் அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. உரிய பதில் கிடைக்கும் வரையில் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் போராடுவோம். எதிர்க்கட்சிகளே இல்லாமல் அவையை நடத்த வேண்டும் என மனநிலையில் உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

Read Entire Article