தொடர்ந்து சரியும் தங்கம் விலை ஒரே நாளில் பவுனுக்கு ரூ.680 சரிவு நகை பிரியர்கள் மகிழ்ச்சி

1 week ago 3

சென்னை: சர்வதேச பொருளாதார நிலைமைக்கு ஏற்ப இந்தியாவில் தங்கம் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணிகள் தங்கம் விலையை நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. மேலும், போர்ப்பதற்றம் மற்றும் மத்திய கிழக்கில் இருந்த நிச்சயமற்ற தன்மை காரணமாக தங்கம் விலை கடந்த சில நாள்களாக ஏற்ற, இறக்கமாக இருந்து வந்தது. உலக நாடுகள் மத்தியில் ஏற்பட்ட பல பொருளாதார நெருக்கடிகள் காரணமாக கடந்த சில மாதங்களாக தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம் விலை கடந்த ஏப்ரல் மாதம் புதிய உச்சம் தொட்டது. இந்த சூழ்நிலையில், ஜூன் மாதம் தொடங்கியதில் இருந்தே தொடர்ந்து உயர்ந்து வந்தது.

இந்நிலையில் கடந்த 21ம்தேதி பவுனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.73,880-க்கும் விற்பனையானது. அதைத் தொடா்ந்து 23ம்தேதி தங்கம் விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.9,230-க்கும், பவுனுக்கு ரூ.40 குறைந்து ரூ.73,840-க்கும் விற்பனையானது. நேற்று முன்தினம் பவுனுக்கு ரூ.600 குறைந்து ரூ.73,240 விற்பனையானது. இந்த நிலையில், நேற்று 3வது நாளாகவும் தங்கம் விலை குறைந்து விற்பனையானது. அதன்படி, தங்கத்தின் விலை நேற்று பவுனுக்கு ரூ.680 குறைந்து ஒரு பவுன் ரூ.72,560-க்கும் கிராமுக்கு ரூ.85 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.9,070-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து தங்கம் விலை குறைந்து வருவது நகை பிரியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

The post தொடர்ந்து சரியும் தங்கம் விலை ஒரே நாளில் பவுனுக்கு ரூ.680 சரிவு நகை பிரியர்கள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Read Entire Article