சென்னை: தொடர்ந்து உச்சம் தொட்டு வந்த தங்கம் விலை நேற்று அதிரடியாக குறைந்தது. ஒரே நாளில் பவுனுக்கு ரூ.960 குறைந்ததால் நகை வாங்குவோர் சற்று ஆறுதல் அடைந்தனர். சர்வதேச நிலவரத்திற்கு ஏற்ப இந்தியாவில் தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. பிப்ரவரி மாதம் தொடங்கியதில் இருந்து வரலாறு காணாத அளவுக்கு தங்கத்தின் விலை உயர்ந்து வந்தது. இதனால் பலரும் அதிர்ச்சி அடைந்தனர். ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.8,000க்கு மேல் விற்கப்பட்டது. பிப்.5ம் தேதி வரலாற்றில் முதல்முறையாக பவுனுக்கு ரூ.63,000 என்ற விலையை தங்கம் எட்டியது.
இதனால் நடுத்தர மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். கடந்த ஒரு மாதத்தில் மட்டும் ஒரு பவுனுக்கு ரூ.4 ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம் வரை விலை உயர்வு பேரதிர்ச்சியை கொடுத்தது. நேற்று முன்தினம் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.80 அதிகரித்து ரூ.8,060க்கும், பவுனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.64,480க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால் நேற்று தங்கத்தின் விலையானது நீண்டநாட்களுக்கு பிறகு சரசரவென சரிந்தது. அதாவது கிராம் ஒன்றுக்கு ரூ.120 குறைந்து ரூ.7940க்கும், பவுனுக்கு ரூ.960 அதிரடியாக குறைந்து ரூ.63,520க்கும் விற்பனை செய்யப்பட்டது. இது நகை வாங்குவோருக்கு சற்று ஆறுதலை கொடுத்தது.
The post தொடர்ந்து உச்சம் தொட்ட நிலையில் தங்கம் விலை நேற்று அதிரடியாக குறைவு: பவுனுக்கு ரூ.960 சரிந்தது appeared first on Dinakaran.