தொடர்ந்து 5 மணி நேரம் பட்டாசு ஆலை வெடித்ததால் 50 வீடு சேதம்

3 months ago 25

சாத்தூர்: விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே முத்தால்நாயக்கன்பட்டியில், சிவகாசியை சேர்ந்த கந்தசாமி என்பவருக்கு சொந்தமான திருமுருகன் பட்டாசு ஆலை உள்ளது. நேற்று காலை 6 மணி அளவில் ஆலை வளாகத்தில், லாரியிலிருந்து பட்டாசு மூலப்பொருட்களை தொழிலாளர்கள் இறக்கியபோது திடீரென வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது.

தொழிலாளர்கள் ஓடியதால் தப்பினர். லாரியின் பாகங்கள் பல மீட்டர் தூரம் பறந்துபோய் விழுந்ததில், பட்டாசுகளை சேமித்து வைத்திருந்த குடோனில் தீ பற்றி வெடித்து சிதறியது. இதன் அதிர்வு சுமார் 10 கிமீ தூரம் வரை உணரப்பட்டது. 5 மணி நேரத்துக்கும் மேலாக பட்டாசுகள் வெடித்ததால் 50க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தது. வெடி விபத்து குறித்து சாத்தூர் நகர் போலீசார் வழக்கு பதிந்து, ஆலை மேலாளர் சரவணக்குமார், வாரி டிரைவர் முருகன் கைது செய்யப்பட்டனர். பட்டாசு ஆலை உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது.

The post தொடர்ந்து 5 மணி நேரம் பட்டாசு ஆலை வெடித்ததால் 50 வீடு சேதம் appeared first on Dinakaran.

Read Entire Article