மொடக்குறிச்சி, ஜூன்28: அவல்பூந்துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய்பருப்பு 77 மூட்டைகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதில் முதல்தரம் ஒரு கிலோ குறைந்தபட்ச விலையாக ரூ.250க்கும், அதிகபட்ச விலையாக ரூ.260க்கும், சராசரி விலையாக ரூ.256.60க்கும்,
இதேபோல் இரண்டாம் தரம் குறைந்தபட்ச விலையாக ரூ.156க்கும், அதிகபட்ச விலையாக ரூ.250க்கும், சராசரி விலையாக ரூ.235.60க்கு ஏலம் போனது. மொத்தமாக 1,911 கிலோ எடையுள்ள தேங்காய்பருப்பு ரூ.4 லட்சத்து 68 ஆயிரத்து 844க்கு விற்பனை நடைபெற்றது.
The post ரூ.4.68 லட்சத்துக்கு தேங்காய் பருப்பு ஏலம் appeared first on Dinakaran.