தொடர்ந்து 3-வது ஆண்டாக சரிந்த சீன மக்கள் தொகை

8 hours ago 2

பெய்ஜிங்,

சீனாவில் மக்கள்தொகை தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக குறைந்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

இந்தியாவுக்கு அடுத்தபடியாக உலகளவில் 2-வது அதிக மக்கள்தொகை கொண்ட நாடான சீனாவில், குழந்தைப் பிறப்பு விகிதம் குறைந்து வருவதாலும், வயதான மக்கள்தொகை அதிகரித்து வருவதும் நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு வழிவகுத்து இருக்கிறது.

2004 ஆம் ஆண்டின் இறுதியில் சீனாவின் மக்கள் தொகை 140 கோடியாக இருந்தது. தற்போது முந்தைய ஆண்டைவிட13.9 லட்சம் அளவிற்கு குறைந்துள்ளது. பெய்ஜிங்கில் அறிவிக்கப்பட்ட புள்ளிவிவரங்களின்படி கிழக்கு ஆசியாவில் ஜப்பான், தென் கொரியா, ஹாங்காங் மற்றும் பிற நாடுகளில் குழந்தைப் பிறப்பு விகிதம் கடுமையாக வீழ்ச்சியடைந்ததாகத் தெரிவித்துள்ளது.

1980 முதல் 2015 வரை சீனாவில் அமல்படுத்தப்பட்டிருந்த 'ஒரு குழந்தை' கொள்கையின் விளைவாக நாட்டில் பிறப்பு விகிதம் தொடர்ந்து குறைந்து வந்தது. இதனை கருத்தில் கொண்டு, 2016 ஆம் ஆண்டில், அந்தக் கொள்கையை ரத்து செய்த சீன அரசு, 2021ஆம் ஆண்டு முதல் தம்பதிகள் மூன்று குழந்தைகளைப் பெற அனுமதி வழங்கியது.

இதனால் குழந்தை பிறப்பு விகிதம் வேகமாகக் குறைந்து வரும் நாடுகளான ஜப்பான், கிழக்கு ஐரோப்பா போன்ற நாடுகளுடன் தற்போது சீனாவும் இணைந்துள்ளது. அதிகரித்துவரும் செலவினங்கள் மற்றும் உயர்கல்விக்கான செலவுகள் போன்றவை திருமணத்தைத் தள்ளிப் போடுவதற்கான முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது. இது குழந்தைப் பிறப்பைத் தள்ளிப்போடவோ அல்லது குழந்தையே வேண்டாம் என்ற முடிவுக்கோ காரணமாக அமைவதாகவும் தரவுகள் தெரிவிக்கின்றன.

கடந்த ஆண்டு மக்கள் தொகையில் சீனாவை பின்னுக்குத் தள்ளி உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட முதன்மை நாடாக இந்தியா விளங்குவது குறிப்பிடத்தக்கது.

Read Entire Article