'எனது உடல்நலனில் எந்த பிரச்சினையும் இல்லை' - நடிகர் விஷால்

5 hours ago 2

சென்னை,

நடிகர் விஷால் சில தினங்களுக்கு முன்பு 'மதகஜராஜா' பட விழாவில் பங்கேற்றபோது மேடையில் கைகள் நடுங்கின. பேசவும் தடுமாறினார். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. விஷாலுக்கு என்ன என்று பலரும் கேள்வி எழுப்பி உடல்நலம் விசாரித்தனர்.

இதையடுத்து விஷாலுக்கு காய்ச்சல் ஏற்பட்டதாகவும், இதற்காக டாக்டரை பார்த்து சிகிச்சை எடுத்துக்கொண்டு வீட்டில் ஓய்வு எடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையில் விஷால் உடல் நிலை குறித்து சமூக வலைத்தளத்தில் வதந்திகள் பரவின. இது அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், தனது உடல்நலனில் எந்த பிரச்சினையும் இல்லை என நடிகர் விஷால் விளக்கமளித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசியபோது நடிகர் விஷால் கூறியதாவது;-

"மதகஜராஜா பட விழாவின்போது எனக்கு தீவிர காய்ச்சல் இருந்தது. உடலில் நடுக்கம் இருந்தது. விழாவிற்கு போக வேண்டாம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தினர். ஆனால் நான் நடித்த படம் 12 வருடங்களுக்கு பிறகு திரைக்கு வருகிறது என்பதால், வேட்டி, சட்டை அணிந்து கொண்டு அந்த விழாவிற்கு சென்றுவிட்டேன்.

ஆனால் என்னால் சமாளிக்க முடியவில்லை. காய்ச்சல் மிகவும் அதிகமாகிவிட்டது. அதை பார்த்தவர்கள் சிலர் எனக்கு நரம்பு தளர்ச்சி, போதைக்கு அடிமையாகிவிட்டார் என ஏதேதோ சொல்லி வதந்திகளை பரப்பினர். இதில் ஒரு நல்ல விஷயம் என்னவென்றால், என்னை நேசிப்பவர்கள் யார் என்பதை நான் தெரிந்து கொண்டேன். எனது உடல்நலனில் எந்த பிரச்சினையும் இல்லை. நான் நன்றாக இருக்கிறேன்."

இவ்வாறு விஷால் தெரிவித்தார். 

Read Entire Article