தொடர் விநியோக மேலாண்மை சான்றிதழ் படிப்பு: மீண்டும் தொடங்குகிறது சென்னை ஐஐடி

3 months ago 9

சென்னை: சென்னை ஐஐடியில் உள்ள அவுட்ரீச் மற்றும் டிஜிட்டல் எஜிகேசன் சென்டர், இன்ஸ்டிடியூட் ஆப் லாஜஸ்டிக் (சிஐஐ) நிறுவனத்துடன் இணைந்து தொடர் விநியோக மேலாண்மை எனும் சான்றிதழ் படிப்பு திட்டத்தை மீண்டும் தொடங்குகிறது. கடந்த 10 ஆண்டுகளில் தொடர் விநியோக மேலாண்மை படிப்பின் கீழ் 40,000க்கும் மேற்பட்ட நிபுணர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. சிஐஐ இன்ஸ்டிடியூட் ஆஃப் லாஜிஸ்டிக்ஸ் தற்போது உயர்மட்ட கல்வி நிபுணத்துவத்தை பாடத்திட்டத்தில் ஒருங்கிணைத்து இப் பாடத்திட்டத்தை மேம்படுத்த உள்ளது.

தகவல் தொழில்நுட்பம், மின்வணிகம், சில்லறை விற்பனை, நுகர்வோர் பயன்பாட்டுப் பொருட்கள், சரக்குப் போக்குவரத்து போன்ற துறைகளைச் சேர்ந்த நிறுவனங்களில் பணியாற்றும் வல்லுநர்களும், பொறியியல், வணிகம், அறிவியல், வணிக மேலாண்மைக் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களும் பயன்பெறும் வகையில் இதற்கான பாடதிட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.இப் பாடத்திட்டம் ஏப்ரல் 1ம் தேதி தொடங்கப்பட உள்ளது. விருப்பம் உள்ளவர்கள் <https://code.iitm.ac.in/supply-chain-management-professional-certification-scm-pro > எனும் இணையதள பக்கத்தின் மூலம் மார்ச் 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என சென்னை ஐஐடி தெரிவித்துள்ளது.

The post தொடர் விநியோக மேலாண்மை சான்றிதழ் படிப்பு: மீண்டும் தொடங்குகிறது சென்னை ஐஐடி appeared first on Dinakaran.

Read Entire Article