தொடர் விடுமுறை எதிரொலி பஞ்சலிங்க அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி

2 weeks ago 5

udumalai, Panchalinga waterfallsஉடுமலை : உடுமலை அருகே உள்ள திருமூர்த்திமலையில் பஞ்சலிங்க அருவி, அமணலிங்கேஸ்வரர் கோயில் உள்ளது. தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள், பக்தர்கள் வருகின்றனர். இந்நிலையில், கனமழை காரணமாக அருவியில் அதிக தண்ணீர் கொட்டியதால் பாதுகாப்பு கருதி கடந்த சில தினங்களாக யாரும் அருவிக்கு செல்ல அனுமதிக்கப்படவில்லை.

தற்போது, மிதமான அளவில் தண்ணீர் விழுகிறது. இதையடுத்து, தீபாவளியையொட்டி தொடர் விடுமுறை வருவதால் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.வனத்துறை மற்றும் கோயில் பணியாளர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

The post தொடர் விடுமுறை எதிரொலி பஞ்சலிங்க அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி appeared first on Dinakaran.

Read Entire Article