தொடர் விடுமுறை எதிரொலி: தஞ்சை பெரிய கோவிலில் குவியும் பக்தர்கள் கூட்டம்

11 hours ago 1

தஞ்சாவூர்,

உலகப்புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவிலின் எழில்மிகு அழகைக் காணவும், பெருவுடையாரை தரிசனம் செய்யவும் இந்தியா மட்டுமின்றி, உலகம் முழுவதும் இருந்து தினந்தோறும் ஏராளமான பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் வருகை தருகின்றனர்.

இந்த நிலையில் தற்போது கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளதால், தஞ்சை பெரிய கோவிலில் சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் அதிக அளவில் குவிந்து வருகின்றனர். கோவிலில் தங்கள் குடும்பத்தோடு சாமி தரிசனம் செய்துவிட்டு பிரகாரத்தை வலம் வந்து புகைப்படம் எடுத்துக் கொள்கின்றனர். அதே போல், தஞ்சை பெரிய கோவிலில் சபரிமலை செல்லும் அய்யப்ப பக்தர்களின் வருகையும் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 


Read Entire Article