ஆந்திரா: சூதாட்ட கும்பலை சேர்ந்த 30 பேர் கைது; பணம், போன்கள் பறிமுதல்

13 hours ago 2

எலுரு,

ஆந்திர பிரதேசத்தில் எலுரு நகர்ப்புற காவல் நிலையத்திற்கு உட்பட்ட தங்கெல்லாமுடி பகுதியில், சிலர் கும்பலாக சட்டவிரோத சூதாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனை தொடர்ந்து நேற்று மாலை இன்ஸ்பெக்டர் சத்யநாராயணா மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் துர்கா பிரசாத் உள்ளிட்ட போலீசார், படூரி நிலையம் என்ற பகுதியில் உள்ள கார் நிறுத்தும் இடத்திற்கு சென்றனர். போலீசாரை பார்த்ததும் பலர் தப்பியோட முயன்றனர். இதுபற்றிய சோதனையில், 30 பேர் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் இருந்து ரூ.8.10 லட்சம் பணம், 25 மொபைல் போன்கள் மற்றும் பைக் ஒன்றும் கைப்பற்றப்பட்டன. அவர்களின் குற்ற பின்னணி பற்றி விசாரணை நடந்து வருகிறது. எனினும், இதனை நடத்திய பில்லா வெங்கடேஷ் என்ற குத்கலு மற்றும் மற்றொரு குற்றவாளி ஆகியோர் தப்பி விட்டனர்.

Read Entire Article