வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி.. தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

12 hours ago 2

சென்னை,

தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர - வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவிய தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக கடலோர மாவட்டங்களில் நேற்று பரவலாக லேசான மழை பெய்தது. சென்னையில் இரவு முழுவதும் பரவலாக விட்டு விட்டு லேசான சாரல் மழை பெய்தது.

இந்த நிலையில், வங்கக்கடலில் நிலவும் தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று அதே பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக படிப்படியாக வழுவிழக்க வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் வருகிற 31-ந்தேதி வரை லேசான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது.

சென்னையில் அடுத்த 48 மணிநேரத்துக்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும், ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

Read Entire Article