சென்னை: தமிழ் புத்தாண்டு, விஷு, புனித வெள்ளி மற்றும் கோடை விடுமுறையை ஒட்டி, சொந்த ஊர்களுக்கு சென்று திரும்பும் பயணிகளின் வசதிக்காக, சென்னை சென்ட்ரல் - கன்னியாகுமரி சிறப்பு ரயில் உள்பட ஆறு சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சென்னை - கன்னியாகுமரி: சென்னை சென்ட்ரலில் இருந்து ஏப்.10, 17 ஆகிய தேதிகளில் இரவு 7 மணிக்கு வாராந்திர சிறப்பு ரயில் (06089) புறப்பட்டு, மறுநாள் காலை 10 மணிக்கு கன்னியாகுமரியை சென்றடையும். மறுமார்க்கமாக, கன்னியாகுமரியில் இருந்து ஏப்.11, 18 ஆகிய தேதிகளில் இரவு 8 மணிக்கு வாராந்திர சிறப்பு ரயில் (06090) புறப்பட்டு, மறுநாள் காலை 11 மணிக்கு சென்னை சென்ட்ரலை வந்தடையும்.