தொடர் மழை காரணமாக நீலகிரியில் தேயிலை மகசூல் அதிகரிப்பு

4 weeks ago 9

 

ஊட்டி, டிச. 20: நீலகிரியில் கடந்த வாரம் பெய்த தொடர் மழை காரணமாக தேயிலை மகசூல் அதிகரித்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் 55 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் தேயிலை விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது. 16 கூட்டுறவு, 100க்கும் மேற்பட்ட தனியார் தேயிலை தொழிற்சாலைகள் உள்ளன. தேயிலை தொழிலை நம்பி மாவட்டம் முழுவதும் சுமார் 60 ஆயிரம் சிறு குறு விவசாயிகள் உள்ளனர். நீலகிரியில் விளையும் பசுந்தேயிலையில் உற்பத்தி செய்யப்படும் தேயிலைத்தூள் ரஷ்யா உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் கடந்த 20 ஆண்டுகளாகவே பசுந்தேயிலைக்கு உரிய விலை கிடைப்பதில்லை. இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் கடந்த மாதம் மற்றும் இம்மாத துவக்கத்தில் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் தேயிலை மகசூல் அதிகரித்துள்ளது. விவசாயிகளும் வருவாய் ஈட்டும் நோக்கில் உரமிடும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே மகசூல் அதிகரிப்பு காரணமாக கூட்டுறவு மற்றும் தனியார் தொழிற்சாலைகளுக்கு பசுந்தேயிலை வரத்து அதிகரித்துள்ளது. தரமான தூள் உற்பத்தி செய்ய வசதியாக தரமான பசுந்தேயிலையை விவசாயிகளிடம் இருந்து வாங்குவதை தொழிற்சாலைகள் உறுதி செய்திட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

The post தொடர் மழை காரணமாக நீலகிரியில் தேயிலை மகசூல் அதிகரிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article