தொடர் மழை காரணமாக நகராட்சி கடையின் மேற்கூரை சிமென்ட் பெயர்ந்து விழுந்தது

8 months ago 34

*ஜோலார்பேட்டையில் பரபரப்பு

ஜோலார்பேட்டை : ஜோலார்பேட்டையில் நகராட்சிக்கு சொந்தமான கட்டிடத்தின் மேற்கூரை சிமென்ட் பூச்சு தொடர் மழையால் பெயர்ந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

வாணியம்பாடி- திருப்பத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் ஜோலார்பேட்டை நகராட்சி சார்பில் கட்டப்பட்ட கடைகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளன. இதிலுள்ள கடை ஒன்றில் சக்கரக்குப்பம் பகுதியை சேர்ந்த குமார் மனைவி வசந்தி(47) என்பவர் டீ கடை நடத்தி வருகிறார்.

இந்நிலையில், நேற்று ஜோலார்பேட்டை பகுதியில் பெய்த கனமழை பெய்தது. அப்போது, கடையின் உரிமையாளர் வசந்தி டீ போட்டு கொண்டு இருந்தார். அப்போது, கடையின் மேற்கூரையில் சிமென்ட் பூச்சு திடீரென உதிர்ந்து விழுந்தது. இந்த சம்பவத்தில் வசந்தி மற்றும் கடையில் இருந்தவர்கள் எந்த காயமும் இன்றி உயிர் தப்பினர்.

நகராட்சி கடையின் மேற்கூரை சிமென்ட் பூச்சு பெயர்ந்து விழுந்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. நகராட்சி மூலம் கட்டப்பட்ட கட்டிடங்களின் உறுதித்தன்மையை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு, பழுதடைந்த கட்டிடங்களை அகற்றி விட்டு புதிய கட்டிடங்கள் அமைக்க வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post தொடர் மழை காரணமாக நகராட்சி கடையின் மேற்கூரை சிமென்ட் பெயர்ந்து விழுந்தது appeared first on Dinakaran.

Read Entire Article