தொடர் தோல்விகள்... சி.எஸ்.கே பயிற்சியாளர் பிளெமிங் கூறியது என்ன..?

1 week ago 5

முல்லன்பூர்,

10 அணிகள் இடையிலான 18வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை 22 லீக் ஆட்டங்கள் நடந்து முடிந்துள்ளன. இந்த லீக் ஆட்டங்களின் முடிவில் புள்ளிப்பட்டியலில் டெல்லி, குஜராத், பெங்களூரு, பஞ்சாப் அணிகள் முதல் 4 இடங்களில் உள்ளன.

தொடர்ந்து 5 முதல் 10 இடங்கள் வரை முறையே லக்னோ, கொல்கத்தா, ராஜஸ்தான், மும்பை, சென்னை, ஐதராபாத் அணிகள் உள்ளன. தலா 5 முறை சாம்பியன்களான மும்பை மற்றும் சென்னை அணிகள் நடப்பு தொடரில் 5 ஆட்டங்களில் 1 வெற்றி மட்டுமே கண்டுள்ளன. அதிலும் குறிப்பாக சென்னை அணி கடைசியாக விளையாடிய 4 ஆட்டங்களிலும் தோல்வி கண்டுள்ளது.

முல்லன்பூரில் நேற்று நடைபெற்ற பஞ்சாப்புக்கு எதிரான ஆட்டத்திலும் 18 ரன் வித்தியாசத்தில் தோல்வி கண்டது. இந்நிலையில், நேற்றைய ஆட்டம் முடிந்த பின்னர் சி.எஸ்.கே. தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது,

நேற்றைய போட்டியை பொறுத்தவரை பீல்டிங்கில் நாங்கள் பெரிய தவறுகள் செய்தோம். சில நேரங்களில் அழுத்ததின் கீழ் எப்படி செயல்பட வேண்டும் என்கிற துல்லியம் இல்லை. பஞ்சாப் வீரர் பிரியன்ஷ் ஆர்யாவின் சிறப்பான இன்னிங்சால் நாங்கள் அழுத்தத்திற்கு உள்ளானோம். அவரைக் கட்டுப்படுத்த நாங்கள் சிறப்பாக செயல்பட்டு இருக்க வேண்டும்.

அங்குதான் ஆட்டம் எங்களிடம் இருந்து விலகிச் சென்றது. நீங்கள் ஐ.பி.எல் தொடரை வெல்ல வேண்டுமானால் பெரும்பாலான ரன்களை பெறுவதற்கு முதல் மூன்று வீரர்கள் கட்டாயம் சிறப்பாக செயல்பட வேண்டியது அவசியம். நாங்கள் அதைச் செய்யவில்லை.

இருப்பினும் நேற்றைய போட்டியில் ஓரளவு நன்றாக செயல்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. போட்டியின் நடுவில் எங்களால் அதே வேகத்தில் விளையாட முடியவில்லை. காரணம் எதிரணியின் சிறப்பான பந்துவீச்சாக கூட இருந்திருக்கலாம். போட்டியின் நடுவில் நாங்கள் சிறப்பாக செயல்படாதது தோல்விக்கு காரணமாகும். இவ்வாறு அவர் கூறினார்.

Read Entire Article