தொடர் ஆய்வுக் கூட்டம், பயிற்சி பாசறை: கட்சியின் உட்கட்டமைப்பை வலுப்படுத்த மதிமுக தீவிரம்

2 hours ago 1

சென்னை: மாவட்ட வாரியாக தொடர் ஆய்வுக் கூட்டம், அணிகளின் பயிற்சி பாசறை போன்றவற்றை நடத்தி கட்சியின் உட்கட்டமைப்பை வலுப்படுத்தும் முயற்சியில் மதிமுக தலைமை தீவிரம் காட்டி வருகிறது.

இது தொடர்பாக கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர் கூறியதாவது: மதிமுகவில் அமைப்பு ரீதியாக புதுச்சேரி, காரைக்காலையும் சேர்த்து 69 மாவட்டங்கள் உள்ளன. இவற்றை பேரூர், ஒன்றியம், கிளை அளவில் வலுப்படுத்துமாறு தலைமை உத்தரவிட்டுள்ளது. குறிப்பாக கடந்த சட்டப்பேரவை, நாடாளுமன்ற தேர்தலில் மதிமுக வென்ற தொகுதிகளில் கட்சியை வலுவாக வைத்திருக்கவும் தலைமை கடுமையான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

Read Entire Article