தொடங்கிய வாக்கு எண்ணிக்கை - நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி வாக்குவாதம்

3 hours ago 2

ஈரோடு,

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் கடந்த 5-ந் தேதி நடைபெற்றது. தி.மு.க. வேட்பாளர் வி.சி.சந்திரகுமார், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி உள்பட மொத்தம் 46 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

இந்த தேர்தலில் 67.97 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. வாக்குப்பதிவு எந்திரங்கள் வாக்கு எண்ணிக்கை மையமான சித்தோடு அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் பாதுகாப்பு அறையில் பூட்டி சீல் வைக்கப்பட்டன.

இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதியில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது .

இந்த நிலையில் வாக்கு எண்னிக்கை நடைபெறும் மையத்தில் நாம தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். நாம் தமிழர் கட்சியின் ஏஜென்டுகளை அனுமதிக்கவில்லை என போலீசாருடன் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார் . இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

Read Entire Article