தொகுதிகள் குறையும் என்பது கற்பனையான அச்சம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அண்ணாமலை பதில்

3 hours ago 2

சென்னை,

2026-ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையிலான மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டால் தமிழ்நாட்டில் 39 தொகுதிகளில் 8 தொகுதிகளை நாம் இழக்க நேரிடும் என முதல்-அமைச்சர் ஸ்டாலின் கூறியிருந்தார். மேலும் மார்ச் 5 ம் தேதி இதுதொடர்பாக ஆலோசிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இந்நிலையில், தமிழகத்தில் நாடாளுமன்ற தொகுதிகள் குறையும் என்பது கற்பனையான அச்சம். தற்போது தொகுதி மறுவரையறை விவகாரத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கையில் எடுத்துள்ளார் என்று தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் தள பதிவில் கூறியதாவது:-

தமது குடும்பத்தினர் நடத்தும் பள்ளிகளைப் போல, தமிழக அரசுப் பள்ளிகளில் படிக்கும் எங்கள் குழந்தைகளுக்கும், மும்மொழிக் கல்வி கிடைப்பதைத் தடுக்கும் தனது வாதத்தை, பெயிண்ட் டப்பாவைத் தூக்கித் திரியும் சிலரைத் தவிர, ஒட்டு மொத்த தமிழகமுமே நிராகரித்துவிட்டதை அறிந்தவுடன், நாடாளுமன்ற இடங்கள் குறைப்பு என்ற தனது கற்பனையின் மூலம் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின். தனது நிலைப்பாட்டில் அவமானகரமான வீழ்ச்சியைச் சந்தித்திருக்கிறது திமுக.

நாடாளுமன்ற இடங்கள் எல்லை நிர்ணயம் எப்போது நடக்கும், அது நடக்கும்போது எப்படி அது தென் மாநிலங்கள் உட்பட அனைவருக்கும் சாதகமாக இருக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தெளிவாகக் கூறியிருந்தும், ஏன் இந்த அச்சத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்? கற்பனையான பயங்களும், முட்டாள்தனமான வாதங்களுமே, தமிழக முதல்-அமைச்சரின் ஒரே செயல்பாடாக மாறிவிட்டன என பதிவிட்டுள்ளார்.

தமது குடும்பத்தினர் நடத்தும் பள்ளிகளைப் போல, தமிழக அரசுப் பள்ளிகளில் படிக்கும் எங்கள் குழந்தைகளுக்கும், மும்மொழிக் கல்வி கிடைப்பதைத் தடுக்கும் தனது வாதத்தை, பெயிண்ட் டப்பாவைத் தூக்கித் திரியும் சிலரைத் தவிர, ஒட்டு மொத்த தமிழகமுமே நிராகரித்துவிட்டதை அறிந்தவுடன், பாராளுமன்ற…

— K.Annamalai (@annamalai_k) February 25, 2025
Read Entire Article