தொகுதி மறுவரையறை என்ற பெயரில் தென் மாநிலங்களை ஒன்றிய அரசு வஞ்சிக்கிறது: திமுக எம்.பி. திருச்சி சிவா பேட்டி

3 hours ago 1


டெல்லி: தொகுதி மறுவரையறை என்ற பெயரில் தென் மாநிலங்களை ஒன்றிய அரசு வஞ்சிக்கிறது என திமுக எம்.பி. திருச்சி சிவா தெரிவித்துள்ளார். மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து இரு அவைகளிலும் திமுக நோட்டீஸ் அளித்தது. தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக மாநிலங்களவையில் விவாதம் நடத்த அவை துணைத் தலைவர் அனுமதி மறுப்பு தெரிவித்தார். நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை குறித்து அவையை ஒத்திவைத்து விவாதம் நடத்த வலியுறுத்தி திமுக எம்.பிக்கள் திருச்சி சிவா, வில்சன் ஆகியோர் நோட்டீஸ் கொடுத்த நிலையில், அதனை விவாதத்துக்கு எடுக்க அவை தலைவர் மறுப்பு தெரிவித்ததை கண்டித்து திமுக எம்.பிக்கள் வெளிநடப்பு செய்தனர்.

திரிணாமூல் காங்கிரஸ் கட்சி எம்.பி.க்களும் மாநிலங்களவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய மாநிலங்களவை திமுக குழுத் தலைவர் திருச்சி சிவா; தென் மாநிலங்களின் நியாயமான பிரதிநிதித்துவத்தைப் பாதிக்கக் கூடியதாக தொகுதி மறுசீரமைப்பு திட்டம் உள்ளது. தென்மாநிலங்களின் நியாயமான பிரதிநிதித்துவத்தை தொகுதி மறுசீரமைப்பு பாதிக்கும். மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்தால், இந்தியாவின் கூட்டாட்சி அமைப்பில் பாதிப்பை ஏற்படுத்தும். தொகுதி மறுவரையறை என்ற பெயரில் தென் மாநிலங்களை ஒன்றிய அரசு வஞ்சிக்கிறது.

மக்கள் தொகையை கட்டுப்படுத்திய தென் மாநிலங்களில் தொகுதிகளை குறைப்பதா? விகிதாச்சார அடிப்படையில் தொகுதி மறுவரையெனில், அது என்ன விகிதாச்சாரம் என விளக்கம் தேவை; உள்துறை அமைச்சர் அமித் ஷா நாடாளுமன்றத்திற்கு வந்து பதிலளிக்க வேண்டும் என்று கூறினார்.

The post தொகுதி மறுவரையறை என்ற பெயரில் தென் மாநிலங்களை ஒன்றிய அரசு வஞ்சிக்கிறது: திமுக எம்.பி. திருச்சி சிவா பேட்டி appeared first on Dinakaran.

Read Entire Article